செய்தி விவரங்கள்

ரஜினிகாந் மற்றும் தமிழக காங்கிரஸ் குழு தலைவர் திருநாவுக்கரசர் இடையில் சந்திப்பு

பிரபல நடிகர் ரஜினிகாந் மற்றும் தமிழக காங்கிரஸ் குழு தலைவர் திருநாவுக்கரசர் இடையில் இன்று சந்தித்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழக காங்கிரஸ் குழு தலைவர் திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி பரவலாக தமிழக அரசியல் வட்டாரங்களில் உள்ளது.
இந்நிலையில். ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றது.
ஏற்கனவே, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் ரஜினி காந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாகப்பார்க்கப்படுகின்றது.

April 21 / 2017