செய்தி விவரங்கள்

அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஜினி நிறைவேற்றுவாரா?

அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஜினி நிறைவேற்றுவாரா?’ என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்  அவருடைய ரசிகர்கள்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என பல காலமாகவே ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பா. ஜ. க.

உள்ளிட்ட கட்சிகள் கூட தங்களோடு இணைந்து கொள்ளுமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், எதற்கும் பதிலளிக்காமல், ஜென் நிலையிலேயே இருந்து வருகிறார் ரஜினி.     இந்நிலையில், நேற்று சென்னை மற்றும் கோவையில் ரஜினியை அழைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் என்ற பெயருடன் இருக்கும் போஸ்டரில், ‘மக்கள் வாழவேண்டும் என்றால், நீங்கள் ஆள வேண்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன், ரஜினியின் முழு உருவ புகைப்படமும் அதில்  அச்சிடப்பட்டுள்ளது.     விசாரித்துப் பார்த்ததில், இந்தப் பெயரில் எந்த மன்றமும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஆனால், ரஜினி அரசியலுக்கு  வரவேண்டும் என தாங்கள் விரும்புவதாக கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வகை : cinema குறிச்சொற்கள் : #IBC Tamil News Today 0 கருத்துக்கள்
April 21 / 2017