செய்தி விவரங்கள்

நடிகர் விஜய் என்னுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டார் - ரின்சன்

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் ரின்ஸன். இவர் நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் பா.பாண்டி படத்திலும் அசத்தி இருக்கிறார்.

நண்பன் படத்தில் நடிக்கும் போது நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். விஜய் தன்னுடன் மிக எளிமையுடன் பழகினார் என்றும், விஜய் அண்ணாக்கு மட்டுமில்லை, அவருடைய பேமிலிக்கு கூட என்னை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், நான் வாழ்க்கையில் சாதித்த பிறகு தான் எல்லோருடனும் போட்டோ எடுக்கவேண்டும் என்று ஒரு கொள்கையோடு இருந்தேன், இது ஷங்கர் சாருக்கு தெரியும். ஒரு நாள் விஜய் அண்ணாவுடன் எல்லோரும் போட்டோ எடுக்க, அவருக்கு என் கொள்கை பற்றி தெரிந்து விட்டது. உடனே என்னை அழைத்து “நான் இப்போ உன்னோடு போட்டோ எடுக்க வேண்டும்” என்று கூறினார், அன்றைய நாள் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத நாளாக அமைந்தது என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

அது மட்டுமின்றி, பவர் பாண்டி படத்தின் மூலம் இன்னும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது, தனுஷ் அண்ணனே என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்’ என கூறி தனக்கும் இயக்குனராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ரின்ஸன்.

வகை : cinema குறிச்சொற்கள் : #Vijay #Nanban 0 கருத்துக்கள்
April 21 / 2017