செய்தி விவரங்கள்

நான் யாருக்கும் எதற்கும் பயந்தது இல்லை - ஸ்ருதி ஹாசன்

"முடியாது, நடக்காது" என்ற சொல் தனது அகராதியில் கிடையாது என்று பெருமிதம் மிக்க வகையில் சுவாரசியமான பேசியுள்ளார் சுருதி ஹாசன்.

சிறுவயதில் இருந்தே உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை வைராக்கியத்தோடு செய்து முடிக்கும் மனோபாவம் எனக்குள் இருக்கிறது. அந்த வேலையை செய்து முடிக்கும் வரை தூங்க மாட்டேன். வளர்ந்த பிறகும் அந்த பழக்கம் என்னை விட்டுப்போகவில்லை.
எதற்கும் பயப்பட மாட்டேன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் எனக்குள் உண்டு. ஏதேனும் கஷ்டமான கதாபாத்திரம் வந்தால் இதை நம்மால் செய்ய முடியுமா என்று யோசித்தது கூட இல்லை. கண்டிப்பாக என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் ஏற்படும். சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறேன்.
பள்ளி நாட்களில் இசை, பொழுதுபோக்கு விஷயங்களில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் பரீட்சை நாட்களில் இரவு பகல் பாராமல் கடுமையாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி விடுவேன்.
கடுமையாக உழைக்கலாம். கஷ்டப்படலாம். பலன் தானாக வந்து சேரும். சினிமாவுக்கும் அந்த தைரியத்தில்தான் வந்தேன். எனக்கு இந்த சினிமா உலகம் நிறைய நல்லது செய்து இருக்கிறது என்று தன்னம்பிக்கையோடு தெரிவித்தார்.

வகை : cinema குறிச்சொற்கள் : #Shruthi haasan #No Fear 0 கருத்துக்கள்
April 21 / 2017