செய்தி விவரங்கள்

அப்பா ஆகிய விஜய் சேதுபதியின் வில்லன்...!!!

மதயானை கூட்டம், கொம்பன், பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி, கிடாரி என பல படங்களில் வில்லனாக நடித்தவர் வேல ராமமூர்த்தி. எழுத்தாளரான இவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒரு படி மேலே அழைத்து சென்றது என்றாலும், விஜய் சேதுபதியுடன் நடித்த சேதுபதி திரைப்படம் இவரை ஒரு உச்சத்துக்கே அழைத்து சென்றது எனலாம்.

ஆண்டவன் கட்டளை, அப்பா போன்ற படங்களில் உணர்ச்சி பூர்வமான வேடங்களில் நடித்ததால் அதன் பிறகு இவரை யாரும் வில்லனாக பார்க்காமல் அப்பா வேடங்களிலும் வேறு முக்கியமான வேடங்களிலும் புக் செய்து வருகின்றனர்.

தற்போது இவர், தனுஷின் அப்பாவாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜெயம் ரவியின் வனமகன், சமுத்ரகனியின் தொண்டன் ஆகிய படங்களில் அப்பாவாக நடித்து கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் வில்லன் கதாபாத்திரங்களில் களக்கி கொண்டிருந்த வேல ராமமூர்த்தி இனி அப்பா வேடங்களிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளார்.

April 21 / 2017