செய்தி விவரங்கள்

மீதொட்டுமுல்ல மீட்பு பணிகள் 7ஆவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

கொழும்பு – மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் 7ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவத்துடன் இணைந்து முப்படையினர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினமும் சடலமொன்றை மீட்பு பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இதற்கமைய இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 245 குடும்பங்களைச் சேர்ந்த 1059 பேர் கொலன்னாவ டெரன்ஸ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 11 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 8 பேர் இந்த அனர்த்தத்தில் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #garbage #meetotamulla 0 கருத்துக்கள்
April 20 / 2017