செய்தி விவரங்கள்

தீபாவின் கணவர் மாதவன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் - ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார்.   

அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

அத்துடன் புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார். 

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மாதவன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் தனது புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் உண்மையான தொண்டர்கள் என்னிடம் இருக்கும் போது பணம் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

April 21 / 2017