செய்தி விவரங்கள்

மீண்டும் ஜனாதிபதி ஆகிறார் பிரணாப் முகர்ஜி?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக அவரையே நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தெரிவு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் அமைக்கவும் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகின்றது.

ஜனாதிபதி பதவிக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்நிறுத்துவது? என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.

April 21 / 2017