செய்தி விவரங்கள்

வவுனியா காத்தார் சின்னக்குளம் பிரதேசத்தில் கடும் காற்று - 48 வீடுகள் சேதம்

வவுனியா காத்தார் சின்னக்குளம் கிராமத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் சுமார் 48 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை 6.00 மணியளவில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையினால் காத்தார் சின்னக்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட அண்ணாநகர், ரம்பவெட்டி, காத்தார் சின்னக்குளம் ஆகிய கிராமங்களிலேயே 48 வீடுகள் பகுதியளவிலும், சில வீடுகளின் கூரைகள் பாதிப்படைந்துள்ளதாக கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிப்படைந்த வீடுகளில் இருந்த ஆவணங்கள் பலவும் அழிவடைந்துள்ளதுடன், பல வீடுகளுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த வீடுகள் அதிகளவில் தற்காலிக வீடுகளாகவும் அரை நிரந்தர வீடுகளாகவும் காணப்படும் நிலையில் அப்பகுதி பொலிஸார் மற்றும் கிராம சேவகர் பிரதேச மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து வருவதுடன் மேற்கொண்டு செயற்படுத்த வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #Vavuniya #Strong wind 0 கருத்துக்கள்
April 10 / 2017