செய்தி விவரங்கள்

விவசாய நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக சிவஞானம் தெரிவிப்பு

வடமாகாணத்தில் விவசாய நிலங்கள் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மீன்பிடி நடவடிக்கைளில் காணப்படும் இடையூறுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஸ்ரீலங்காவிற்கான சுவிஸ்லாந்து தூதுவர் கென்ஸ் வோக்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுவதாக கென்ஸ் வோக்கர் தெரிவித்த போதிலும் அதனை வடமாகாண சபை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்காவிற்கான சுவிஸ்லாந்து தூதுவர் கென்ஸ் வோக்கர் நேற்றைய தினம் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது வடபகுதி கடற்பரப்பில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பல் ஆராயப்பட்டதாக  வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #Land snatching 0 கருத்துக்கள்
March 29 / 2017