செய்தி விவரங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்காக திமுக நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆங்காங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #DMK #Jallikattu 0 கருத்துக்கள்
March 15 / 2017