செய்தி விவரங்கள்

இரட்டை இலை விவகாரத்தில் மேலதிக ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் மேலதிக ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதற்கமைய மேலதிக ஆவணங்களை வழங்க 8 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை வழங்குமாறு கோரியதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இதனால் இரட்டை இலை விவகாரத்தில் மேலதிக ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையகம் எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #Double leaf #Court 0 கருத்துக்கள்
April 21 / 2017