செய்தி விவரங்கள்

கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 25 இல் ஆரம்பம்

தமிழ் சிங்களப் புத்தாண்டு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை, வந்தாறுமூலை வளாகங்கள், மட்டக்களப்பு மருத்துவ பீடம் மற்றும் விபுலாநந்த இசை நடனக் கல்லூரி என்பன அவற்றின் சகல விதமான பீடங்களினதும் கல்வி நடவடிக்கைக்காக மீளத் துவங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான புதிய வேந்தர் நியமனம் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், பிற்போடப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21வது பொதுப்பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும் அவரது பிரசின்னத்துடன் தாமதமின்றி இடம்பெறுமென்றும் கூறினார்.

 

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #New Year #viral fever 0 கருத்துக்கள்
April 20 / 2017