செய்தி விவரங்கள்

ஹோட்டன் சமவெளியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

நுவரெலியா ஹோட்டன் சமவெளிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஹோட்டன் சமவெளிக்கு அதிகளவில் சென்று வருகின்றனர்.

நுவரெலியாவில் இருந்து 22 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா சுற்றுலா துறையில் பெரும் பங்காற்றி வருகின்றது.

இந்த நாட்களில் ஓஹிய மற்றும் பட்டிபொல நுழைவாயிலுக்கு அருகில் நீண்ட வாகன வரிசை ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உலகமுடிவினை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருப்பதாக அங்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுற்றுலா பயணிகளின் பொலித்தீன் பயன்பாடு தொடர்பில் ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் பொறுப்பாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பொலித்தீன் பாவனையால் சுற்று சூழல் பாதிக்கப்படும் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வகை : internal-affairs குறிச்சொற்கள் : #people #hottan 0 கருத்துக்கள்
April 20 / 2017