செய்தி விவரங்கள்

கொப்புளங்களை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள்

கோடை காலம் வந்துவிட்டால் நீரிழப்பு நோய்கள், தோல் தொடர்பான கொப்புளங்கள் வேனல் கட்டிகள் பலருக்கு ஏற்படும்.

இவ்வாறான தோல் தொடர்பான பிரச்சனைகள் வரும் போது வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை வைத்தே அவற்றை குணப்படுத்தலாம்.

(1) சீரகத்தைப் பொடி செய்து சிறிது தேங்காயப் பாலில் கலந்து குழப்பி பூசினால் வேனல் கட்டிகள் உடைந்து விடும்.

(2) வாழைப்பூவைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பூசலாம்.

(3) வெறும் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் விட்டுக் கலந்து பூசினால் வேனல் கட்டிகள், வேர்க்குரு,        நாய்முள் எனப்படும் சூட்டுக் கொப்புளங்கள் நீங்கி வலியும் குறையும்.

(4) கொத்துமல்லி இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கிக் கட்டினால் வேனல் கட்டிகள் உடைந்து விடும்.

(5) பப்பாளி மரத்தைக் கீறினால் கிடைக்கும் பாலை இளநீர் அல்லது சந்தனத்தில் குழைத்து வேர்க்குரு, வேனல்கட்டி       கரப்பான் மீது பூசிவர படிப்படியாக உலர்ந்து குணமாகும்.

(6) பப்பாளிப்பாலையும், போரிக்; பவுடரையும் உடம்பில் தேய்த்துக் கொள்ளலாம். இந்தக் களிம்பு படை சொறி              சிரங்குகள் குணமாகப் பயன்படுகிறது.

(7)  சந்தனத்தை அரைத்துத் தடவினால் வேனல் கட்டிகள் குணமாகும்.

(8) வசம்பை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தேய்த்தால், வேனல் கட்டிகள் குணமாகும்.

(9) கருஞ்சீரகத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவினால் ஊறல் எடுக்காமல் இருக்கும்.

(10) நுங்கின் நீரைத் தடவினால் வலி குறையும்.

(11) சப்பாத்திப்பூவை அம்மியில் அரைத்துப் பூசினால் கட்டிகள் உடைந்து விடும்.

(12) குழந்தைகளுக்கு அக்கி வந்தால் முதலில் பேதிக்குக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்து கொண்டு பப்பாளிச்சாற்றை பசும்பால் கலந்து அக்கி வந்திருக்கும் இடத்தில் பூசி வந்தால் அக்கி குணமாகும்.  

வகை : physical-health குறிச்சொற்கள் : #summer blisters 0 கருத்துக்கள்
April 21 / 2017