செய்தி விவரங்கள்

அரச அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பாரபட்சமின்றி செயற்படவேண்டும்

அரசியல்வாதிகள் தவறான உத்தரவு பிறப்பித்தால், அதற்கு அடிபணியாமல் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, அரசு அதிகாரிகள் பங்கேற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசு அதிகாரிகளின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து பாரபட்சமின்றி செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் எஜமானர்களின் தவறான உத்தரவுக்கு அடிபணியாமல் துணிச்சலாக செயற்படுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முடிவு எடுப்பதில் தயக்கம் ஏற்பட்டால், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் நாட்டின் ஜனநாயகம் சிறப்பாக செயற்படுவதற்கு, நிர்வாக முறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வகை : politics குறிச்சொற்கள் : #Politicians #Rajnath Singh 0 கருத்துக்கள்
April 21 / 2017