செய்தி விவரங்கள்

அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் உருவாகி வருவதாக தகவல்

சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்து வருவதாக கூறப்படும் இந்த கூட்டத்தில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான இனக்கமான சூழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் இரு அணி அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டநிலையில், ஓபிஎஸ், தம்பிதுரை உள்ளிடோரும் இரு அணிகள் இணைவது குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகை : politics குறிச்சொற்கள் : #admk meet 0 கருத்துக்கள்
April 17 / 2017