செய்தி விவரங்கள்

அதிமுக இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்-ஜெயக்குமார்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு அணிகளும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கட்சியிலிருந்து பிரிந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்தும், தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது எனத்தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக உள்ளனர் எனக் கூறிய ஜெயக்குமார், ஓபிஎஸ் கருத்தை முன்னிட்டு இரு அணிகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவது குறித்தும் ஆலோசித்ததாகவும் கூறியுள்ளார்.

வகை : politics குறிச்சொற்கள் : #aiadmk meet 0 கருத்துக்கள்
April 18 / 2017