செய்தி விவரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டமைக்காக தப்பிக்க முடியாது

தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்பதற்காக குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் முடியாது என ஸ்ரீலங்கா சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த அகலங்க ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போரின் போதும், போருக்குப் பின்னரும், குற்றங்களை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போரின் போது கொடுமைகளை செய்த சீருடையில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரங்கள் சரியாகத் தீர்க்கப்படாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வகை : politics குறிச்சொற்கள் : #Srilanka #ltte 0 கருத்துக்கள்
April 21 / 2017