செய்தி விவரங்கள்

வியாழன் கிரகத்தை மிக அருகில் போட்டோ எடுத்து அனுப்பிய டெலஸ்கோப்

நாசா அனுப்பிய சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் வியாழன் கிரகத்தை மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்க நாசா மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்கு சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அதில், அதிநவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் அண்மையில் வியாழன் கிரகத்தை மிக அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இது கடந்த 3-ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது. வியாழன் பூமியில் இருந்து சுமர் 60 கோடி கி.மீற்றர் தூரத்தில் உள்ளது.

 

வகை : science குறிச்சொற்கள் : #Planet 0 கருத்துக்கள்
April 09 / 2017