செய்தி விவரங்கள்

அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை நடைமுறையை இறுக்கமாக்க தீர்மானம்

அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெறுவதற்காக இருக்கும்  நடைமுறையை மேலும் இறுக்கமாக்க பிரதமர் மெல்கம் டேர்புல் தலைமையிலான அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக ஆங்கில மொழி அறிவு தொடர்பிலும் அவுஸ்திரேலியாவிற்கே உரிய நற்பண்புகள் தொடர்பிலும் கடுமையான சோதனைகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் டேர்புல் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு வேலை செய்வதற்கான வீசா நடைமுறையை கடுமையாக்கிய இரண்டு தினங்களில் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெறும் சட்டங்களையும் கடுமையாக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஆங்கில மொழி அறிவை பரீட்சிக்கும் கடும் சோதனைகளுக்கு முகம்கொடுப்பது மாத்திரமன்றி பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் நிரந்தர வதிவிட வீசாவை நான்கு வருடங்களுக்கு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அதுவும் எந்தவித இடைவெளியும் இன்றி தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என புதிய சட்டம் குறித்து அறிவித்த அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய சமூகத்துடன் குடியேறிகளை முழுமையாக உள்வாங்கும் நோக்கிலேயே இந்த நடைமுறையை கொண்டுவந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #rules #tight 0 கருத்துக்கள்
April 21 / 2017