செய்தி விவரங்கள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தின் எதிரொலி - நாடு திரும்புகிறார் ரணில்

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்நாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த விபத்தில், 26 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், ஸ்ரீலங்கா பிரதமர் தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை மறுநாள் - ஏப்ரல் 19 ஆம் நாளே நாடு திரும்புவதற்கு ஸ்ரீலங்கா பிரதமர் திட்டமிட்டிருந்தார். எனினும் முன்கூட்டியே அவர் கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

April 17 / 2017