செய்தி விவரங்கள்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தீர்வின்றிய நிலையில்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தீர்வின்றிய நிலையில் பதின்மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் நிறைவுபெற்ற நிலையில் இராணுவத்தின் கையில் தாம் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில கடந்த எட்டாம் திகதி முதல் தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

March 24 / 2017