செய்தி விவரங்கள்

வடகொரியாவின் மீது பொருளாதார நெருக்கடி; சீனாவுடன் அமெரிக்கா இணைவு

வடகொரியாவின் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகொரியாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்படுமேயானால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு 10 நாட்களுக்கான சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, ஜப்பானின் யொகோசுகா துறைமுகத்தில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க ரொனால்ட் ரீகன் விமானத்தை பார்வையிடும் பொருட்டு சென்ற போதே அவர் ஊடகவியலாளர்களுக்கு குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா, தனது அணுவாயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தும் என  பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையிலேயே மைக் பென்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #China #north korea 0 கருத்துக்கள்
April 19 / 2017