செய்தி விவரங்கள்

சிரிய கிளர்ச்சியாளர்களின் இராசாயன ஆயுதங்களே பொதுமக்களின் உயிரிழப்பு காரணம்

சிரிய கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த இராசாயன ஆயுதங்களே பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இட்லிப் மாகாணத்தில் சிரிய இராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் ஈராக்கில் பயன்படுத்துவதெற்கென விஷப் பொருட்களை தயாரிக்கும் சுரங்கமொன்றின் மீதே சிரிய இராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ள போதிலும் சிரிய இராணுவ விமானங்களே இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் கூறியுள்ளன.

ரஷ்யாவின் இந்த கருத்து குறித்து பதில் அளித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் போரிஸ் ஜோன்சன், இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் சிரிய படையினரே அதனை மேற்கொண்டதை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உள்ளிட்ட 72 பேர் உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Syrian Rebels 0 கருத்துக்கள்
April 05 / 2017