செய்தி விவரங்கள்

வடகொரியா அணுவாயுத நடவடிக்கைகள் நடத்துமாயின் கடுமையான தடைகள் விதிக்கப்படும்

அணுவாயுத சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தால் வடகொரியாவின் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் பரிசோதனை செய்யக்கூடாது என ஐ.நா தடைவிதித்துள்ளது.

ஐ.நாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த மாதத்தில் மட்டும் 5 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியிருந்த நிலையில் கடைசியாக ஏவப்பட்ட ஏவுகணை பரிசோதனை தோல்வியடைந்தது.

அத்துடன் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பலை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் எந்நேரமும் போர் வெடிக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது , வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்கின்ற வகையில் வடகொரியாவின் நடத்தை இனியும் அமைந்தால் அந்நாட்டின் மீது மேலும் புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #weapons- #sanctions 0 கருத்துக்கள்
April 21 / 2017