செய்தி விவரங்கள்

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து போர்ப்பயிற்சி

 

அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சி இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கன்சன் விமானத் தளத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிகளில் சுமார் ஆயிரத்து 500 அமெரிக்க மற்றும் தென்கொரிய விமானப் படையினர் பங்கேற்றுள்ளனர்.

குறித்த பயிற்சியின் போது, போர்ச்சூழல்களில் ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் வகையஜல் எஃப்-16, எஃப்-15கே உள்ளடங்கலான 80 விமானங்கள் இருதரப்பினர் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தவார இறுதியில் கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், வடகொரியா விரைவில் ஆறாவது அணுவாயுத சோதனையை நடத்தக் கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வடகொரியாவுக்கு எதிரான தென்கொரிய படைகளுடன் சுமார் 28 ஆயிரத்து 500 அமெரிக்க துருப்புக்கள் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தென்கொரியாவில் நிலைநிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Usa #south korea 0 கருத்துக்கள்
April 20 / 2017