செய்தி விவரங்கள்

டோர்மன்ட் கழக வீரர்கள் மீது நடத்தப்ட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் கைது

ஜெர்மனியில் டோர்மன்ட் கால்ப்பந்தாட்ட கழக வீரர்கள் பயணித்த பேரூந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை ஜேர்மன் பொலிசார் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கழகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பணத்துக்காகவே நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜேர்மன் மற்றும் ரஷ்ய இரட்டை குடியுரிமை கொண்ட 28 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் அல்ல எனவும் இது பணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் சம்பியன்லீக் கால்பந்து தொடரில் மொனாக்கோ அணியுடன், கடந்த 11ஆம் திகதி இடம்பெறவிருந்த காலிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த பொருசியா டொர்ட்மண்ட் கால்பந்து அணி வீரர்களின் பேரூந்தை இலக்கு வைத்து மூன்று குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Attack #bus 0 கருத்துக்கள்
April 21 / 2017