செய்தி விவரங்கள்

ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு அவசியம் வேண்டும்- ட்ரம்ப்

ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு அவசியமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பின் போது இரு நாட்டிற்குமிடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தேவையான உதவிகளை மேற்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலுமிக்க ஐரோப்பா அனைவரது நலனுக்கும் மிகவும் முக்கியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐரோப்பாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐ.எஸ் ஆயததாரிகளின் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்திவரும் ட்ரம்ப், இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியாவின் வழியை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Usa #important 0 கருத்துக்கள்
April 21 / 2017