செய்தி விவரங்கள்

பலஸ்தீன-இஸ்ரேலுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்

பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் மக்களின் நலனை கருத்திற் கொண்டு, இருதரப்பிறகுமான சமாதான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

மத்தியகிழக்கு பிரச்சினை தொடர்பிலான ஐ.நா. பாதுகாப்பு சபையில் நேற்றைய தினம் இடம் பெற்ற மாதாந்த கூட்டத்தின் போதே சீனா இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பேரவையில், இடம்பெற்ற இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வசிக்கும் மக்களின் நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த சீனாவின் பிரதிநிதி, இருநாடுகளிலும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளிடையிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பேச்சுவார்த்தைகளின் மூலமே திருப்புமுனைகளை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு தரப்பிற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும் எனவும் இதன்மூலம் இறுதி தீர்வொன்றை எட்ட முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #talks #peace 0 கருத்துக்கள்
April 21 / 2017