செய்தி விவரங்கள்

தாய்லாந்தில் தொடர் குண்டுத் தாக்குதல்: சம்பவத்திற்கு காரணம் யார்?

தாய்லாந்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் 15 இடங்களில் வெடிகுண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களினால் 2 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாய்லாந்தில் நடத்தப்பட்ட தொடர்தாக்குதல்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் எல்லை பகுதியான மலாய் படானி மண்டலத்திற்குட்பட்ட நராதிவாட் மற்றும் சாங்லா மாகாணத்தின் படானி பகுதியில்உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 7.30 மணி முதல் 8.30 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் ராணுவத்திற்கு சொந்தமான இடம், காவல் நிலையம் மற்றம் குடியிறுப்புப் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அத்துமீறிய மர்ம நபர்களினால் பாதுகாப்புப் படை மீது கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Police #investigate 0 கருத்துக்கள்
April 21 / 2017