செய்தி விவரங்கள்

பிரான்சில் துப்பாக்கி தாக்குதல் : பொலிசார் ஒருவர் பலி இருவர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பொலிசதிகாரி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

கனரக துப்பாக்கியினால் காவற்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்திய  பயங்கரவாதியும் சக காவற்துறை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் பாரிசின் வர்த்தக நகரமான சாம்ஸ் எலிசிசில் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலினால் பாிஸ் நகாில் கடும் பதற்றம் நிலவிய நிலையில், குறித்த  பகுதியில் ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிசதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாரீஸ் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஜோகன்னா பிரிமெவர்ட், சுற்றுலாத்துறையின் பிரபல இடத்திற்கு அருகே உள்ள ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் சுரங்கப்பாதை காவல் நிலையத்தை குறிவைத்து குறித்த நபர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 230இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு ஐ.எஸ். ஆயுததாரிகள் பாரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்.

எதிர்வரும் மாதம் பிரான்ஸில் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வகை : world-affairs குறிச்சொற்கள் : #Police #dead 0 கருத்துக்கள்
April 21 / 2017